இனிகோ பிரபாகருக்கு நல்ல நேரம் துவங்கிவிட்டது எனலாம். இதுவரை மற்ற நாயகர்கள் நடிக்கும் படங்களில் ஓரளவு முக்கியத்துவம் உள்ள வேடங் களில் தலைகாட்டி வந்தவர், இப்போது தனி நாயகனாக வலம் வருகிறார். அதுவல்ல சேதி... இனிகோ நாயகனாக நடிக்கத் தொடங்கியதும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இனி வசூலும் திருப்திகரமாக அமைந்தால், ஏற்றம் தான் என்கிறார்கள் திரை விமர்சகர் கள். தற்போது எஸ்.பரீத் இயக்கத்தில் இனிகோ நாயகனாக நடித்துள்ள படம் 'வீரையன்'. மூன்று கோணங்களில் இப்படத்தை உருவாக்கியுள்ளனராம். 1990களின் காலகட்டத்தைப் பின் னணியாகக் கொண்டு உருவாகியுள்ள படம் இது.
ஷைனி நாயகியாக நடிக்க, 'ஆடுகளம்' நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், 'ஆரண்ய காண் டம்' வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். "ஒரு பக்கம் தந்தை, மகன், இன் னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று விஷயங்களை உள்ளடக்கிய கதை இது. எனவே மூன்று கோணங் களில் படமாக்கப்பட்டுள்ளது.
"சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும் தஞ்சை மக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் வலியுறுத்தும் கதை யாகவும் இப்படம் உருவாகி இருக்கி றது," என்கிறார் இயக்குநர் எஸ்.பரீத். பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், நகைச்சுவை நடிகர் என்ற வழக்கமான சினிமா கட்டமைப்புக்கு அப்பாற்பட்டதாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களைச் சொல்லும் சூழ்நிலைக ளும், சம்பவங்களுமே கதையை முன் னோக்கி எடுத்துச் செல்லுமாம். நவம்ப ரில் திரை காணும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள திருநங்கை பாத்திரமும் `சரசம்மா' என்கிற ஆவி பாத்திரமும் படத்திற்குப் பலத்தைக் கூட்டியிருப்ப தாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
'வீரையன்' படத்தின் ஒரு காட்சியில் இனிகோ பிரபாகர், ஷைனி.

