'ஜெயிக்கிற குதிர'

'ஜெயிக்கிற குதிர'

1 mins read
6c9ef41e-7473-49ce-8931-ed5641dad23e
-

ஜீவன் நடிப்பில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு உருவாகி யுள்ள படம் 'ஜெயிக்கிற குதிர'. ஷக்தி என்.சிதம்பரம் இயக்கி உள்ளார். டிம்பிள் சோப்டே, சாக்‌ஷி அகர்வால், அஸ்வினி என மொத்தம் மூன்று நாயகிகள் உள்ளனர். கவர்ச்சிக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமே இல்லாத வகையில் காட்சிகளை அமைத்துள்ளாராம் ஷக்தி சிதம்பரம்.

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஜெயபிரகாஷ், தலைவாசல் விஜய், கோவை சரளா, ரவி மரியா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, தீபா, பவர்ஸ்டார் உள்பட பலர் நடிக்கிறார்கள். "இன்றைய இளைய தலை முறை ரசிகர்களுக்குப் பிடித்த படமாக இருக்கும். நகைச்சுவை, காதல், கவர்ச்சி போன்ற எல்லா அம்சங்களும் உள்ளன. எனவே, இளையர்களிடம் நல்ல வர வேற்பு கிட்டும். தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க நகைச்சுவைக் கலாட்டாவாக இருக்கும்," என்கிறார் ஷக்தி சிதம்பரம்.