ரசிகர்கள் ஆதரவால்தான் இந்த அளவு வளர்ந்திருப்பதாகச் சொல்கிறார் நடிகை ஓவியா. ஒரே ஒரு படத்திலாவது அஜித்துடன் நடித்துவிட வேண்டும் என்பதே இவரது விருப்பமாம். அஜித், விஜய் இருவருமே பெரிய நடிகர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது தெரிவித்தார் ஓவியா. "அஜித் படத்தில் எந்த பாத்திரத்திலும் நடிக்க தயார். சாதாரண பணிப்பெண் வேடம் என்றாலும் கூட நடிப்பேன். "முன்பு வருமானத்துக்காக வேலை தேடியபோது மாடலிங் செய்தேன். பின்னர் 'களவாணி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் நடிகை ஆனேன்," என்றார் ஓவியா. பல படங்களில் தாம் நடிப்பதாக வரும் செய்திகள் எல்லாமே உண்மையல்ல என்று குறிப்பிட்டவர், ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க முடியாது என்றார்.
ஓவியா: எல்லா செய்தியும் உண்மையல்ல
1 mins read
-

