'மெர்சல்' திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ததற்காகவும் ஆதரவு கொடுத்ததற்காகவும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ''மெர்சல்' திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுக்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றும் மிகப் பெரிய வெற்றிப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித் துள்ளார்.
"மாபெரும் வெற்றியடைந்துள்ள 'மெர்சல்' திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. "இதற்குப் பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்பு களான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையத்தளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர் கள், எனது நண்பர்கள் (ரசிகர்கள், ரசிகைகள்), பொதுமக்கள் அனை வருக்கும் எனக்கும், 'மெர்சல்' படக் குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்," என விஜய் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட் டுள்ளார்.

