பொதுவாக விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் என்றாலே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவது கோடம்பாக்கத் தில் வழக்கமான செய்தியாகி விட்டது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு சற்றும் குறை வைக்காமல் உரு வாகி வருகிறது `ஜுங்கா'. கோகுல் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத் தின் படப்பிடிப்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள் ளதாம். இத்தகவலை சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். `ஜுங்கா'வின் முக் கிய காட்சிகள் அனைத் துமே வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகின்றன.
அவற்றுள் பெரும் பாலானவை பாரீஸ் நகரில் எ டு க் க ப் ப ட் டு ள் ள தா க த் தகவல். இதற்காக படக்குழுவி னர் கடந்த சில தினங்களாக பாரிசில் முகா மிட்டிருந்தனர். இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தற்போது ஆஸ்ட்ரியா சென்றுள்ளதாக சாயிஷா தெரிவித்துள்ளார். அங்கு படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளும், பாடல்களும் படமாக்கப்பட உள்ள னவாம். படப்பிடிப்பில் தானும் பங்கேற்பதாக சாயிஷா டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். `ஜுங்கா' படத்துக்கு இசை சித்தார்த் விபின். இவர் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்த `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா' படத்திற்கு இசையமைத்தவர். `ஜுங்கா' படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து வருவதால், தனது விருப்பப்படி சித்தார்த் விபினை ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. படப்பிடிப்பு முடியும் முன்பே `ஜுங்கா'வின் வெளியீட்டு உரிமை கணிசமான தொகைக்கு விலை போயிருப்பதாகக் கேள்வி. விஜய் சேதுபதி, கோகுல் கூட்டணியில் உருவாவதால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து படத்தின் வெளியீட்டுத் தேதி எப்போது அறிவிக்கப்படும்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள்.

