ரிச்சா: புதிய பகுதியில் இருக்கிறேன்

ரிச்சா: புதிய பகுதியில் இருக்கிறேன்

1 mins read
c0f2e334-c546-4846-af82-c2482cdd4bd6
-

இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார் ரிச்சா கங்கோபாத்யாயா. டுவிட்டர் தளத்தில் அண்மையில் ரசிகர்களுடன் உரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தனு‌ஷுடன் 'மயக்கம் என்ன', சிம்புவுடன் 'ஒஸ்தி' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ரிச்சா, திடீரென படிப்பில் கவனம் செலுத்த முடிவெடுத்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பட்ட மேற்படிப்பு மேற்கொள்வதற்காக அமெரிக்கா சென்றார். இந்நிலையில், 'முன்னாள் இந்திய திரைப்பட நடிகை' என்று தனது பெயரை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ரிச்சா. "திரைத்துறையை விட்டு வெளியேறி ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும், என்னுடைய அடுத்த படம் என்ன என்று கேட்பவர்களுக்கு இது தான் பதில்.... நான் வாழ்க்கையின் புதிய பகுதியில் இருக்கிறேன். "நடிக்க வேண்டும் என்கிற லட்சியம் எல்லாம் இல்லை. நான் நடிக்க வரமாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன். "நடிப்பைக் கைவிட்டால் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர் களா? என்று ஒருசிலர் கேட்பது வெறுப்பூட்டுகிறது," என்று ரிச்சா மேலும் தெரிவித்துள்ளார்.