நகர்ப்புறங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தனக்கு வெற்றியைத் தேடித் தராததால் கிராமத்துக் கதைகளைத் தேர்வு செய்து வருகிறார் விக்ரம் பிரபு. 'நெருப்புடா' படத்திற்குப் பிறகு நிக்கி கல்ராணியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள விக்ரம் பிரபு, 'பக்கா' என்ற பக்காவான கிராமத்துப் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கோயில் திருவிழாவுக்காக கரகாட்டப் பாடல் ஒன்று உள்ளது. இதற்காக கிராமத்திற்குச் சென்று உண்மையான கரகாட்டக்காரர்களின் ஆட்டத்தை கவனித்து அதற்கேற்றார்போல் இசையமைத்திருக் கிறாராம் இசையமைப்பாளர் சத்யா. இந்தப்பாடலுக்கு நடிகர் விக்ரம் பிரபுவும் நடிகை நிக்கி கல்ராணியும் கரகாட்டம் ஆடி இருக்கிறார்கள். அதற்காக இருவரும் முறைப்படி கரகாட்ட பயிற்சி பெற்றதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர். இந்தப் படம் முழுவதும் கிராமத்து மணம் வீசுவதால் படம் இறுதிவரை நாட்டுப்புற இசை ஒலித்துக்கொண்டே இருக்கும் என்கிறார் இயக்குநர் சூர்யா. கிராமத்துப் படங்கள் விக்ரம் பிரபுவுக்குக் கை கொடுக் குமா என்பதை பொறுத் திருந்து பார்ப்போம்.
விக்ரம் பிரபுவுக்கு கிராமம் கைகொடுக்குமா
1 mins read
-

