'மெர்சல்' தெலுங்கு வெளியீடு திடீர் நிறுத்தம்

'மெர்சல்' தெலுங்கு வெளியீடு திடீர் நிறுத்தம்

1 mins read
adec5751-319d-4ac6-9ec1-ca00b37276ec
-

விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் அந்தத் திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தைப் பார்க்கும் ஆவல் தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களிலும் இருப்பதால் 'அதிரிந்தி' என்ற பெயரில் தெலுங்கில் மெர்சல் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 27ஆம் தேதியான நேற்று ஹைதராபாத் திரையரங்குகளில் 'அதிரிந்தி' வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், திட்டமிட்டபடி படம் நேற்று வெளியாகாது என்று தெலுங்கு படக்குழு டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. தெலுங்குப் பதிப்பில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளின் வசனம் நிறுத்தப்பட்டுவிட்டபோதிலும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, மெர்சல் படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் அப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை மீட்க உத்தரவிடுமாறும் ஏ.அஸ்வத்தாமன் என்னும் வழக்கறிஞர் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. "கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்குமானது. தனிப்பட்ட ஒருவருக்கு படம் பிடிக்கவில்லையெனில் அப்படம் பார்ப்பதைத் தவிருங்கள். "இதற்காக ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள்?," என எரிச்சலுடன் கேட்ட நீதிபதிகள், மெர்சல் படத்தை எதிர்ப் பதில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.