ஒரே சமயத்தில் வெற்றி மாறன், கௌதம் மேனன், ஏ.எல்.விஜய், மணிரத்னம் என முன்னணி இயக்குநர்களின் படங் களில் ஒப்பந்தமாகி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவற்றுள் வெற்றி மாறனின் 'வடசென்னை' படம் முதலில் வெளியாக வாய்ப்புள்ளதாம். அதை யடுத்து கௌதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' வெளியாகக்கூடும் என்கிறார். 'வடசென்னை' படம் குறித்து? "இது பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் படம். நிச்சயமாக சரா சரி படங்களைப் போல் இருக்காது எனும் உத்தரவாதத்தை அளிக்க முடியும். "கடந்த 1980களில் தொடங்கி தற்போ தைய காலகட்டம் வரை நீளும் கதை. "நான் பள்ளி, கல்லூரி மாணவி யாகவும் ஆசிரியை யாகவும் பின்னர் திருமணமான பெ ண்ணாகவும் வெவ்வேறு தோற் றங்களில் திரை யில் தோன்று வேன். " நிச்சயமாக ரசிகர்களைப் போன்று எனக் கும் இது வித்தி யாசமான படம் தான். "இயக்குநர் வெற்றி மாறன், தனுஷ் ஆகி யோருடன் முதன்முறை யாக நான் இணைந்து பணியாற்றி உள்ளேன்.
'வடசென்னை பொண்ணு'
1 mins read
-

