'மெர்சல்' படைத்த புதிய சாதனை

'மெர்சல்' படைத்த புதிய சாதனை

1 mins read
8cec69a9-ab16-40e8-8037-878cf73103e7
-

எந்தளவு சர்ச்சைகளுக்கு வித்திட் டதோ, அதே அளவு சாதனை களையும் புரிந்திருக்கிறது 'மெர்சல்'. ஏற்கெனவே இப்படம் ரூ.200 கோடி வசூலை எட்டிப்பிடித்து விட்டதாகத் தகவல் வெளியானது. அதிக திரையரங்குகளில் வெளி யான தமிழ்ப் படம், அமெரிக்காவில் அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என பல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தமிழக அளவில் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது 'மெர்சல்'. இப்படத்தின் பாடல்களை இணையத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 'ஆன்லைன் ஸ்ட்ரீமிங்' என்ற விதத்தில் 'மெர்சல்' பாடல்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை நூறு மில்லியனைக் கடந்துள்ள தாம்.

இத்தகவலை சோனி மியூசிக் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள் ளது. இதனை விஜய் ரசிகர்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையே இயக்குநர் அட் லியைக் குறை கூறும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 'மெர்சல்' கதை உருவாக்கத் தில் 'பாகுபலி' கதாசிரியர் தந்தை விஜயேந்திர பிரசாத் ஈடுபட்டிருந் தார். இதற்காக அவருக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் அதில் ரூ.2 கோடி மட்டுமே தரப்பட்டதாம். படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றபோதும் மீதத் தொகையைத் தர அட்லி முயற்சி எடுக்கவில்லை என விஜயேந்திர பிரசாத் புலம்பு வதாகத் தமிழ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.