ஒரு பக்கம் பட இயக்கம், மற் றொரு பக்கம் நடிப்பு என கோடம் பாக்கத்தில் ஒரே சமயத்தில் இரட்டைச் சவாரி மேற்கொண்டுள் ளார் மு.களஞ்சியம். அவரது இயக்கத்தில் உரு வாகி வரும் புதிய படம் 'முந்திரிக்காடு'. இதில் சீமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். "இயக்குநர் சீமானுக்கும், ரஜினியை வைத்துப் படமெடுக்கும் இயக்குநர் ரஞ்சித்துக்கும் இடையே அண்மையில் 'நீட்' நுழைவுத் தேர்வால் உயிரிழந்த அனிதா குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது. ரஞ்சித்துக்கு சீமான் சொல்லுகிற பதிலாக என்னுடைய 'முந்திரிக்காடு' அமையும்.
"இந்தக் கதையைச் சொல்லி நடிக்க அவரிடம் கேட்டபோது மகிழ்வோடு இசைந்தார். முன் தொகை கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். சம்பளமே வாங்காமல்தான் சீமான் நடித்துக் கொடுத்திருக்கிறார். "நான் மேடைக்கு மேடை முழங்கிக்கொண்டிருக்கிற விஷ யத்தைப் படமாக எடுத்திருக் கிறீர்கள். இதில் நடிப்பதற்கு காசு வாங்க நான் என்ன வியாபாரியா?' என்று அறச்சீற்றத்தோடு கேட்டார். சம்பளம் வாங்கிக்கொள்ள மறுக்கிறாரே என்கிற தர்மசங்கடம் இருந்தாலும், அவரது கேள்வியில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டதால் நானும் அவரது முடிவை மகிழ்வோடு ஏற்றேன்," என்கிறார் களஞ்சியம்.
தமிழனின் சாபமான சாதியத்துக்கு எதிரான இந்தப் படத்தில் ஒரு தமிழனாக சமூகப் பார்வை யோடு சீமான் மிகச்சிறப்பாக நடித்திருப்பதாகப் பாராட்டுபவர், இயக்கப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதி லும், தனது இந்தப் படத்துக்கும் சீமான் நேரம் ஒதுக்கி, எந்தச் சிரமமும் ஏற்படாதவாறு ஒத்து ழைத்ததாகச் சொல்கிறார். இது வடதமிழகத்து முந்திரிக் காட்டு மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் படமாம். அதனால்தான் இப்படி யொரு தலைப்பைத் தேர்வு செய்துள்ளனராம். "முந்திரி ஏற்றுமதி ஆகிறது. விலையுயர்ந்த பொருள். ஆனால், இதை வியர்வை சிந்தி விளை விக்கும் ஏழைகளின் வாழ்க்கையை எடுத்துக்காட்டியிருக்கிறோம். "அங்கேயும் காதல் உண்டு. காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரி விக்க, காவல்துறை தன்னுடைய கண்ணியத்தை நிலைநாட்டுகிறது என்பதுதான் கதை," என்கிறார் மு.களஞ்சியம்.
'முந்திரிக்காடு' படத்தின் ஒரு காட்சியில் புழல், சுபப்பிரியா.

