அண்ணன், தங்கை பாசத்தை விவரிக்க வருகிறது 'கொடி வீரன்'

அண்ணன், தங்கை பாசத்தை விவரிக்க வருகிறது 'கொடி வீரன்'

1 mins read
2fcf45b3-f9f6-4b72-ae15-f8b93eb5b6d1
-

சசிகுமாரும் இயக்குநர் முத்தையாவும் 'குட்டி புலி' படத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். 'கொடி வீரன்' படத்தில் நாயகன் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் மகிமா நம்பியார். விதார்த், பூர்ணா, சனுஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். குறிப்பாக பூர்ணாவுக்கு எதிர்மறை வேடமாம். சசிகுமாரின் மைத்துனராக நடிக்கிறார் விதார்த். மதுரையில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். கதிர் ஒளிப்பதிவை கவனிக்க, ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இது அண்ணன், தங்கை பாசத்தை விவரிக்கும் கதையைக் கொண்ட படமாம். "எனது முந்தைய படங்களைப் போலவே இதுவும் கிராமத்துப் பின்னணியில் உருவாகி உள்ள படம். ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்," என்கிறார் முத்தையா.