"சாமானிய மக்களின் பிரச்சினைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு பெண் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அவள் யார்? அவள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்னென்ன? என்பதை 'திட்டிவாசல்' படத்தில் அலசியுள்ளோம்," என்கிறார் இயக்குநர் பிரதாப் முரளி. சமூக யதார்த்தத்தையும், சாமானிய மக்கள் வாழ்க்கையும் பிரதிபலிக்கும் இக்கதை பிடித்துப் போய் நாசர் முக்கிய வேடத்தில் நடிக்க சம்மதித்தாராம். மகேந்திரன், தீரஜ், ஐஸ்வர்யா, ஷைனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளுடன் வெளிவரும் இப்படம் நிச்சயம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என 'திட்டிவாசல்' படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் 'திட்டிவாசல்'
1 mins read
-

