கவர்ச்சிப் படங்களை வெளியிட்ட ஸ்ரேயா

கவர்ச்சிப் படங்களை வெளியிட்ட ஸ்ரேயா

1 mins read
8a64cd3e-fa5c-4d6a-9c15-51752b6b0994
-

நடிகை ஸ்ரேயா திடீரென தாம் நீச்சல் உடையில் கவர்ச்சியாக உள்ள தன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவற்றை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் இந்தோனீசியா சென்றிருந்தாராம் அம்மணி. அங்குள்ள பன்டா கடல் பகுதியில் தான் இவரது கவர்ச்சிப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு கடற்கன்னி போன்று தோற்றம் தரும் இந்தப் படங்களை கடலுக்கு அடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரான அனுப்ஜகட் எடுத்துக் கொடுத்தாராம். ஸ்ரேயாவுக்கு தற்போது சொல்லிக் கொள்ளும்படியான பட வாய்ப்புகள் ஏதுமில்லை. எனவே திரைத்துறையினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் இந்தப் படங்களை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 'எனக்கு 20 உனக்கு 18' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஸ்ரேயா, ஜெயம் ரவியுடன் நடித்த 'மழை' படத்தின் மூலம் பிரபலம் ஆனார். 'சிவாஜி' படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது தமிழில் 'நரகாசுரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.