தம்பி ராமையா படம் இயக்கி ரொம்ப காலமாகிவிட்டது. குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் மட்டுமே அசத்திக் கொண்டிருக்கிறார். தம்பி ராமையா இருக்கும் படத்தில் நிச்சயம் நகைச்சுவை இருக்கும் என ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்நிலையில், தன் மகனுக்காக ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார் தம்பி ராமையா. அவரது மகன் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்துக்கு 'உலகம் விலைக்கு வருது' என்று தலைப்பு வைத்துள்ளனர். 'மனுநீதி', 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஆகியவற்றை தொடர்ந்து தம்பி ராமையா இயக்கும் படம் இது. மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, ஒய்.ஜி.மகேந்திரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'பவர் ஸ்டார்' சீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
மகனுக்காக தம்பி ராமையா இயக்கும் திரைப்படம்
1 mins read
-

