நான் சோத்துக்கட்சி: கஸ்தூரி விளக்கம்

நான் சோத்துக்கட்சி: கஸ்தூரி விளக்கம்

1 mins read
07febb28-8f1f-41c7-ba96-a3469f5c2039
-

தமக்கு எல்லா கட்சிகளிலும் நண்பர்கள் இருப்பதாகக் கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி. திமுகவில் தாம் இணையப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் கற்பனையானது என அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக மத்திய, மாநில ஆளும் கட்சிகளின் நடவடிக்கைகளை தாம் விமர்சிப்பதாகவும், இதையடுத்தே தம்மை திமுக அனுதாபியாக சித்திரிக்கிறார்கள் என்றும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார். "முன்பு ரஜினியை விமர்சித்தபோது பாமக என்றார்கள், நேரில் சந்தித்தால் ரஜினி ஆதரவாளர் என்றார்கள். கங்கை அமரனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் ஆதரவு தெரிவித்தேன். உடனே பாஜகவில் இணையப் போகிறேன் என்றனர். இப்போது திமுக பிரசார பீரங்கி என்கிறார்கள். எல்லா கட்சி நண்பர்களையும் நான் அவ்வப்போது சந்திப்பது உண்டு. ஆனால், நான் என்னவோ சோத்துக்கட்சி தான்," என்று கஸ்தூரி கூறியுள்ளார்.