கார் விவகாரம்: புலம்பும் அமலா பால்

கார் விவகாரம்: புலம்பும் அமலா பால்

1 mins read
04760a44-b10a-4330-bd06-a7ce97f60965
-

"சில சமயங்களில் நகரின் வேடிக்கைகளில் இருந்தும், தேவையற்ற யூகங்களில் இருந்தும் ஒருவர் தப்பி ஓடிவிட வேண்டும்," என்று கூறியுள்ளார் அமலா பால். ஏன் இவ்வளவு விரக்தி என்கிறீர்களா? எல்லாம் சொகுசுக் கார் வாங்கியதால் வந்த வினைதான். கார் வாங்கியதில் அமலா பால் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. வாகனங்களுக்கு அளிக்கப்படும் குறைந்த வரியைப் பெற புதுவையில் தங்கி இருப்பது போன்று ஆவணங்களைத் தயாரித்து, திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் உயர் ரக கார்களைப் பதிவு செய்வதாகக் கூறப்படுகிறது. நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் எனப் பலரும் இந்தப் புகாருக்கு ஆட்பட்டுள்ளனர். இந்நிலையில் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமலா பால். "இப்போதைக்கு படகுப் பயணம் செல்ல விரும்புகிறேன், அது சட்டத்தை மீறுவதாகாது என்றே நினைக்கிறேன். அல்லது என் 'நலன் விரும்பி'களிடம் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமா?" என்று சொகுசுக் கார் விவகாரம் குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.