அதிகரிக்கும் தங்கம், சிகரெட் கடத்தல்

அதிகரிக்கும் தங்கம், சிகரெட் கடத்தல்

2 mins read

கோவை: கோவைக்கு வரும் விமா னப் பயணிகள் கிலோ கணக்கில் தங்கம், கட்டு கட்டாக சிகரெட்டு களை கடத்தி வருகின்றனர். இந்த தொடர் சம்பவங்கள் கோவை சுங்கத் துறையினருக் கும் மத்திய வருவாய் புலனாய் வுப் பிரிவு அதிகாரிகளுக்கும் பெரும் தலைவலி தரும் விவகார மாக விளங்குவதாக தமிழக ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோவை அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு களுக்கும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானச் சேவை வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வசதிகள் அதிகரிக்கத் தொடங்கியது முதல் கடத்தல் நபர்கள் நூதன முறைகளில் கோவை வழியாக தங்கம், வெளி நாட்டு சிகரெட்டுகளை கடத்துவ தும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. "முன்பெல்லாம் போதைப் பொருட்களை வயிற்றில் வைத்து கடத்தினர்.

தற்போது இதே பாணியில் தங்கத்தையும் கடத்த துவங்கியுள்ளனர். இதை உறுதிப் படுத்தும் வகையில் சில நாட் களுக்கு முன் இலங்கையில் இருந்து கோவை வந்த விமானப் பயணி வயிற்றில் வைத்து கடத்தி வரப்பட்ட 20 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போன்று உடலில் அதிகளவு நகை களை அணிந்து வந்த 10க்கும் மேற்பட்ட பயணிகளும் சிக்கினர். "இதுபோன்ற கடத்தல் முறை கள் உன்னிப்பாகக் கண்காணிக் கப்பட்டு வருகின்றன. கடத்தல் நபர்களின் நடை, உடல் மொழிகள், அவர்கள் வேகமாக வெளியேறும் செயல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். "கோவை விமான நிலையம் வழியாக கடத்த முயன்ற 3.69 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ தங்கம் நடப்பாண்டில் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. "தங்கத்தை அடுத்து அதிகளவு வெளிநாட்டுச் சிகரெட்டுகளும் பிடிபட்டுள்ளன," என்று சுங்க அதிகாரிகள் கூறினர்.