பிரான்சில் கொட்டமடிக்கும் நடிகைகள்

பிரான்சில் கொட்டமடிக்கும் நடிகைகள்

2 mins read
b5ec9827-a76e-4607-b31b-bf7433a7bac1
-

இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'குயின்'. இந்தப் படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் மறுபதிப்பு செய்யப்பட்டு வருகிறது. கங்கனா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தைத் தமிழில் காஜல் அகர்வாலும் தெலுங்கில் தமன்னாவும் கன்னடத்தில் பருல் யாதவ்வும் மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக தமன்னா, காஜல் அகர்வால், பருல் யாதவ், மஞ்சிமா மோகன் ஆகிய நால்வரும் ஒரே சமயத்தில் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளனர். நான்கு நடிகைகளும் கைகளில் மெகந்தியுடன் இந்தியாவிலிருந்து கிளம்பிச் சென்றனர். இவர்கள் கைகளில் மருதாணியுடன் இருக்கும் படங்களை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டிருக் கிறார்கள்.

அங்கு நால்வரும் ஒரே விடுதியில் தங்கி பிரான்சை சுற்றிப் பார்த்தனர். நால்வரும் கூத்தும் கும்மாளமுமாக இரண்டு நாட்களைக் கழித்த பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். அவர்கள் நடிக்கும் காட்சிகள் தனித் தனியாகப் படம் பிடிக்கப்படுகிறது. தமிழ், கன்னட மொழிகளை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். நான்கு மொழிகளில் படமாகும் இப்படத்தை ஒரே சமயத்தில் வெளியிட இருக்கிறார்கள். கதைப்படி காஜல் அகர்வால் திருமணம் நின்றதும் பாரீஸ் சென்றுவிடுவார். அங்கு அவருக்கு அறிமுகமாகும் அந்த நாட்டுத் தோழியாக நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தி படத்தில் இந்த வேடத்தில் லிசா ஹைடன் நடித்திருந்தார். இதில் நடிக்க ஆரம்பத்தில் ஒப்புக் கொண்ட எமி தற்பொழுது படத்திலிருந்து விலகிவிட்டார்.

படத்தில் காஜல் அகர்வாலுக்குத்தான் முக்கியத்தும் இருக்கிறது. அவரது தோழியாகத்தான் நடிக்கிறோம் என்பதை உணர்ந்து விலகி இருப்பதாக கூறப் படுகிறது. விரைவில் எமி நடித்துள்ள '2.0' படம் வெளிவர இருக்கிறது. அதற்குப் பிறகு எமியின் மார்க்கெட் உயரும். அதன் பிறகு புதிய படங்களில் நடிக்கலாம் என்ற காரணத்துக்காகவும் அவர் இந்தப் படத்திலிருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.