சந்தானம் படங்களுக்கு இடையே மோதல்

சந்தானம் படங்களுக்கு இடையே மோதல்

1 mins read
45783fd0-4a4d-421a-bd30-6d24b44b6a95
-

சந்தானம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள படம் 'சக்க போடு போடு ராஜா'. இது தவிர வேறு இரு படங்கள் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் அவரது படங்க ளுக்கு இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. தற்போது 'சர்வர் சுந்தரம்' படத்திலும் நடித்துக்கொண்டிருக் கிறார் சந்தானம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் இப்படம் உருவாகி யுள்ளது. முன்பே வெளியாகி இருக்க வேண்டிய நிலையில், பணப் பிரச் சினை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தற்போது டிசம்பரில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதாம் தயாரிப்புத் தரப்பு. இதையடுத்துப் பணப் பிரச்சி னையைச் சரி செய்வதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.