ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் 'பில்லா பாண்டி'

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் 'பில்லா பாண்டி'

1 mins read
dd324658-3ebc-41bf-bc7a-4ae9f383762b
-

தற்போது அதிகமான படங்களில் நடித்து வரும் புது நாயகர்கள் பட்டியலில் ஜி.வி.பிரகா‌ஷுக்கு அடுத்த இடத்தில் உள்ளாராம் ஆர்.கே.சுரேஷ். நாயகன் வேடமோ, குணச்சித்திர கதாபாத்திரமோ, படத்துக்குப் படம் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது 'பில்லா பாண்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆர்.கே.சுரேஷ். இதில் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராகத் தோன்றுவாராம். 'மேயாத மான்' படத்தின் வழி ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்துஜா தான் இப்படத்தின் கதாநாயகி. சரவணஷக்தி இயக்க, கே.சி.பிரபாத் என்ற புதுமுகம் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். மேலும், சாந்தினி, தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன் உள்ளிட்ட பலர் நடிக்கின் றனர். படக்குழுவினர் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பாடல் வெளியீடு நடைபெற உள்ளதாகவும் பொங்கல் பண்டிகை சமயத்தில் 'பில்லா பாண்டி' வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.