ரி‌ஷி: ரசிக்க வைக்கும் நல்ல காதல் கதை '143'

ரி‌ஷி: ரசிக்க வைக்கும் நல்ல காதல் கதை '143'

1 mins read
f906e57b-a6a2-4427-ba66-6bd1b34bc083
-

அமாவாசை அன்று பிறந்த நாயகனுக்கும் பெளர்ணமி அன்று பிறந்த நாயகிக்கும் இடையே மலரும் காதல் என்ன ஆகிறது என்பதை விவரிக்கிறது '143'. சதீஷ் சந்திரா பாலேட் இப் படத்தைத் தயாரித்துள்ளார். காதலர்கள் ஆங்கிலத்தில் கூறும் 'ஐ லவ் யூ' என்பதன் குறியீட்டுச் சொல்லே '143'. இதையே தனது படத்தின் தலைப் பாக வைத்துள்ளார் இயக்குநர் ரி‌ஷி. இப்படத்தின் கதாநாயக னாக நடித்து, கதையையும் அவரே எழுதியுள்ளார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக் கிய கதாபாத்திரங்களை ஏற்றுள் ளனர். மேலும் சுதா, ராஜசிம்மன், பிதாமகன் மகாதேவன், நெல்லை சிவா இவர்களுடன் தயாரிப்பாளர் சதீஷ் சந்திராவுக்கும் முக்கிய மான வேடம் ஒதுக்கப்பட் டுள்ளதாம்.

'143' படத்தில் இடம்பெறும் காட்சியில் ரி‌ஷி, பிரியங்கா ஷர்மா.