செல்லப் பிராணிக்கும் தனிக் கணக்கு

செல்லப் பிராணிக்கும் தனிக் கணக்கு

1 mins read
62d69403-6b3c-4395-8996-4189b18a0b99
-

செல்லப் பிராணி மீதான நடிகை பிரணீதாவின் பாசத்துக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளும் சமூகவலைத்தளமான இன்ஸ்ட்ராகிராமில் தனது செல்ல நாய்க்குட்டி 'ப்ளூ'வுக்கு எனத் தனிக் கணக்கு தொடங்கி உள்ளாராம். "தன்னுடைய குழந்தை சிறந்த குழந்தை என்றே பெற்றோர்கள் கூறுவார்கள். அவ்வாறு கூற வேண்டியதும் அவசியம். "அப்படித்தான் செல்லப் பிராணிகளை வளர்க்கும் அதன் ஒவ்வொரு உரிமையாளருக்கும் தங்களின் வளர்ப்புப் பிராணிதான் சிறந்தது எனச் சொல்லத் தோன்றும். என்னுடைய 'ப்ளூ'வை இனி ரசிகர்களும் மற்றவர்களும் சமூக வலைத்தளத்தில் பின் தொடர முடியும். இது இரு தரப்புக்குமே உற்சாகம் தரும் என நம்புகிறேன்," என்கிறார் பிரணீதா. அவரது அறிவிப்பை அறிந்த பின்னர் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் ப்ளுவைப் பின் தொடர்வதாகத் தகவல்.