ஏழு கேமராக்களை வைத்துப் படமாக்கப்பட்ட 'இப்படை வெல்லும்'

ஏழு கேமராக்களை வைத்துப் படமாக்கப்பட்ட 'இப்படை வெல்லும்'

1 mins read
4bd77a6a-d66f-4f0f-8e71-0dcdee6199fb
-

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி, மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் `இப்படை வெல்லும்'. ஏற்கெனவே 'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' ஆகிய படங்களை இயக்கியவர் கவுரவ். இம்முறை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பைத் தரப் போகிறாராம். இப்படத்துக்காக சென்னை, அலகாபாத், ஹைதராபாத், பெங்களூர், திருவண்ணாமலை, ஓமன் என பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முதன் முறையாக ஏழு கேமராக்களை வைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். சண்டைக்காட்சி ஒன்றில் நடித்தபோது சக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உணர்ச்சி வேகத்தில் உதயநிதியை உண்மையாகவே அடித்துவிட்டாராம். எனினும் அவரது இயல்பான நடிப்பைப் பாராட்டினாராம் உதயநிதி.