சுசீந்திரன்: சமூக அக்கறையுடன் கூடிய செய்தி உள்ள படம்

2 mins read
abc4c96d-11d3-4e66-8c00-c769b7a7aa91
-

"மிகப் பெரிய நடிகரை வைத்துப் படம் எடுத்தால் அது வெற்றியடையும் போது, அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புது முகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும் போது அந்த வெற்றி அப்படத்தின் இயக்கு நரையே சேரும்," என்கிறார் இயக்குநர் சுசீந்திரன். தற்போது 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற தலைப்பில் படம் இயக்கியுள்ளார் இவர். வரும் 10ஆம் தேதி படம் வெளியாகின்றது. இது விறுவிறுப்பான படமாக இருக்கும் என்று குறிப்பிடுபவர், 'நான் மகான் அல்ல', பாண்டியநாடு' போன்ற தனது முந்தைய படங்களைப் போலவே இப்படத்தின் இறுதிக்காட்சியும் ரசிகர் களைக் கவரும் என்கிறார்.

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத் தில் சந்திப், விக்ராந்த் கதை நாயகர் களாகவும் மெஹரின் நாயகியாகவும் நடித்துள்ளனர். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட் டுள்ள படம் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். "நான், இசையமைப்பாளர் இமான் இருவரும் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துள்ளோம். பாடல் கள் நன்றாக வந்துள்ளன. என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார். "சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். இதில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். என்னை மிகவும் ஆச்ச ரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி. 'வெண்ணிலா கபடி குழு'வுக்கு பின் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம். இந்த படத்தின் கலை இயக்கு நராக சேகர் பணியாற்றியுள்ளார்.

"நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றியைத் தரும் படமாக அமையும். இது என்னுடைய பாணியில் அமைந்த படம் என்பேன். "என்னுடைய அனைத்து படங்க ளிலும் சமூக நீதி இருக்கும். 'ராஜ பாட்டை' ஒரு தோல்வி படமாக இருந் தாலும் அதிலும் என் சமூக அக்க றையை வெளிப்படுத்தி இருப்பேன். 'மெர்சல் படத்தைப் போலவே, 'நெஞ் சில் துணிவிருந்தால்' படத்திலும் அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது. "இதில் விக்ராந்த் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருவார். புது முகங்களைக் கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது," என்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் சந்திப், மெகரின்.