அனுயாவின் புகார்

அனுயாவின் புகார்

1 mins read
4c86a256-cebf-45ac-a303-610edc35ab2d
-

'சிவா மனசுல சக்தி', 'நண்பன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் அனுயா. சில மாதங்களுக்கு முன்னர் இவரது ஆபாசப் படங்கள் சில இணையதளங்களில் பரவின. எனினும் அவை அனைத்துமே ஏமாற்று வேலை செய்து போலியாக உருவாக்கப்பட்டவை எனத் தெரியவந்தது. இந்நிலையில் இணையத்தளங்களில் இருந்து அந்த ஆபாச படங்களை நீக்குமாறு சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்துள்ளார் அனுயா. "சமூகவலைத் தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. "எனவே அந்த ஆபாச படத்தை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அனுயா கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கிவிட்டதாக போலிசார் தெரிவித் துள்ளனர்.