கல்விக்குக் கைகொடுக்கும் விஜய் சேதுபதி

கல்விக்குக் கைகொடுக்கும் விஜய் சேதுபதி

1 mins read
4462d8b5-43ae-49e0-9ea8-15a2b6e8c775
-

வசதி குறைந்த, ஆதரவற்ற, உடற்குறையுள்ளோரின் கல்விக்கு உதவும் வகையில் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்குகிறார் நடிகர் விஜய் சேதுபதி. தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் இதனை அறிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, "நான் விளம்பரப் படங் களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.

தற்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். "அதன்மூலம் எனக்குக் கிடைத்த சம்பளத்தின் ஒரு பகு தியைக் கல்வி உதவித் தொகை யாக வழங்க முடிவு செய்துள் ளேன். "அரியலூர் மாவட்டம் கல்வி யில் பின்தங்கி உள்ளது. அந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்குத் தலா ரூ.50,000 வீதம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரம், தமிழகத்தில் 10 அரசு பார்வையற்றோர் பள்ளி களுக்குத் தலா ரூ.50,000 வீதம் ரூ.5 லட்சம், 11 அரசு செவித் திறன் குறைந்தோர் பள்ளி களுக்குத் தலா ரூ.50,000 வீதம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஹெலன் கெல்லர் என்ற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு ரூ.50,000 என மொத்தமாக 49 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அம்மாவட்ட ஆட்சியரிடம் வழங்கவிருக் கிறேன்," என்று கூறினார்.