திருமணத்துக்குப் பின் புகுந்த வீட்டாரை வெகுவாகக் கவர்ந்துவிட்டார் சமந்தா. அவரது குணநலன்களை மாமனாரும் நடிகருமான நாகார்ஜுனா புகழ்ந்து தள்ளுகிறார். "ஒரு சிறந்த நடிகை எனது மருமகளாக வந்து எங்கள் கலைக் குடும்பத்தில் இணைந்திருக்கிறார். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ராஜுஹரிகாதி-2' படத்தில் நடித்த போது சமந்தாவின் நடிப்பாற்றலைத் தெரிந்துகொண்டேன்," என்கிறார் நாகார்ஜுனா. தன் மகனை திருமணம் செய்வதற்கு முன்பே சமந்தா தங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தார் என்று குறிப்பிடும் நாகார்ஜுனா, திருமணத்துக்குப் பின்னர் தன்னிடம் சமந்தா மிகுந்த பாசத்துடன் நடந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.2017-11-13 06:00:12 +0800
புகுந்த வீட்டாரைக் கவர்ந்த சமந்தா
1 mins read
-

