வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்வதில் மட்டுமல்ல, ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதிலும் கெட்டிக்காரராக உள்ளார் விஜய் ஆண்டனி. அவர் தற்போது நடித்து வரும் 'அண்ணாதுரை' படத்தையும் தனக்கே உரிய பாணியில் ரசிகர் களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியைத் தொடங்கி உள்ளார். அத்திட்டத்தின்படி 'அண்ணா துரை'யின் முதல் 10 நிமிடக் காட்சிகள் வெளியிடப்பட்டுள் ளன. இந்தக் காட்சிகள் விஜய் ஆண்டனி பெயரில் உருவாக்கப்பட் டுள்ள இணையத்தளத்தில் நேற்று வெளியாயின.
அதிலிருந்து ரசிகர்கள் இலவச மாக அக்காட்சிகளைப் பதிவிறக் கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதற்கிடையே 'அண்ணாதுரை' பாடல்களும் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளி யிடப்பட்டன. இப்படத்தில் விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மஹிமா உள் ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியும் ராதிகா சரத்குமாரும் இணைந்து தயா ரித்திருக்கிறார்கள். 'எமன்' படத்தைத் தொடர்ந்து 'அண்ணாதுரை' மற்றும் 'காளி' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் ஆண் டனி. இதில் 'அண்ணாதுரை' படத்தின் பணிகள் முழுமையாக முடிவுற்று இம்மாதம் 30ஆம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகி றது.
'அண்ணாதுரை' படத்தில் விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா

