பாலைய்யா டி ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'காத்திருப்போர் பட்டியல்'. இதில் நாயகனாக சச்சின் மணியும், நாயகியாக நந்திதாவும் நடித்துள்ளனர். 'லேடி டிரீம் சினிமாஸ்' நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை பைஜா டாம் தயாரிக்கிறார். "இது முழுநீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகி வருகிறது. நல்லதொரு நாடகம்போல் படம் ரசிகர்களைக் கவரும். நகைச்சுவை, காதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நேர்த்தியாக கலந்திருப்பதால் எந்தவொரு கட்டத்திலும் ரசிகர்களுக்கு அலுப்புத்தட்டாது. நாயகன் சச்சினும், நாயகி நந்திதாவும் தங்களுக்குரிய பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளனர். மற்ற நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் நேர்த்தியாகப் பணியாற்றி உள்ளனர். படம் நிச்சயம் வெற்றி பெறும்," என்கிறார் இயக்குநர்.
'காத்திருப்போர் பட்டியல்'
1 mins read
-

