இனியா: பங்கேற்க மறுத்துவிட்டேன்

இனியா: பங்கேற்க மறுத்துவிட்டேன்

1 mins read
7b6b8428-fa31-4ee0-8b40-e153af395496
-

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி பலமுறை அழைத்தும் ஒப்புக் கொள்ளவில்லையாம் நடிகை இனியா. தனக்கு அதில் பங்கேற்க விருப்பம் இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டாராம். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர் இளம் நாயகி ஓவியாவை தமிழ்த் திரையுலக ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்தே போனார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவரது மதிப்பு அதிகரித்து புதுப்பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. மேலும், அவருக்கான ரசிகர் கூட்டமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இனியாவிடம் கேட்டபோது "மனம் ஒப்புக் கொள்ளாததால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில் 'பிக்பாஸ்' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வாய்ப்பு எல்லாம் சில நாட்கள்தான். அதன்பிறகு பழைய இடத்துக்கே நம் நிலைமை திரும்பிவிடும்," என்று தன் கருத்தைத் தெரிவித்தார் இனியா.