காரைக்குடி பெண்ணாக அமலா பால்

காரைக்குடி பெண்ணாக அமலா பால்

1 mins read
64f446d8-3611-4d53-a782-d3cddaec2311
-

தமிழ் நடிகையரில் ஒரு சிலர் மட்டுமே எந்த ஒரு விஷயத்தையும் எளிதாகக் கடந்து அடுத்தடுத்த நிலைக்குத் தன்னைத் தயார்ப்படுத்தி கொள்வர். அந்த வகையில் தன்னைப் பற்றி வரும் செய்திகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருப்பவர் அமலாபால். அவர் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள 'திருட்டுப் பயலே 2' பற்றியும் அவரைப் பற்றியும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார் அமலா பால். 'திருட்டுப் பயலே 2'ல் உங்ளுடைய கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறுங்கள்.

"இந்தப் படத்தில் என் கதாபாத்திரத் தின் பெயர் அகல்விளக்கு. மூக்குத்தி, பாவாடை, தாவணி, புடவையில் வரும் அம்சமான காரைக்குடி பெண்ணாக இதில் நடித்துள்ளேன். வசிக்கும் வீடு முதல் கட்டும் புடவை வரை எல்லா வற்றையும் வண்ணமயமாக வைத்துக் கொள்ள விரும்பும் வேடத்தில் நடித்து உள்ளேன். "சமூக வலைத்தளங்களில் மும்முரமாக இருக்கும் பலரது வாழ்க்கையை ஒளிவு மறைவில்லாமல் சொல்லும் படமாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சொல்லும் படமாகவும் இது இருக்கும். இதைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் படமாக சுசி கணேசன் இயக்கியுள்ளார்.