தீபிகா மூக்கை வெட்டுவோம்; அவர் தலைக்கு ரூ.5 கோடி பரிசு

தீபிகா மூக்கை வெட்டுவோம்; அவர் தலைக்கு ரூ.5 கோடி பரிசு

2 mins read
bd6163e3-fd7e-459e-8ea1-128d145f12f2
-

மும்பை: 'பத்மாவதி' படம் வெளி யாவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தீபிகா தெரிவித்த கருத்துக்கு ராஜபுத்திர கர்னி சேனா என்ற அமைப்பு "தீபிகா மூக்கை வெட்டுவது உறுதி," என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. தீபிகாவிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண் டிருக்கின்றன. இதன் காரணமாக தீபிகாவின் இல்லத்திற்கும் அலு வலகத்திற்கும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 'பத்மாவதி' படத்துக்காக உரக் கக் குரல் கொடுத்து வக்காலத்து வாங்கும் நடிகை தீபிகா படு கோனின் மூக்கை வெட்டுவோம் என ஒரு அமைப்பும் அவரது தலையைக் கொண்டு வருபவர் களுக்கு ரூ.5 கோடி பரிசு அளிப் போம் என மற்றொரு அமைப்பும் மிரட்டல் விடுத்துள்ளன.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத் மினியின் கதையை மையமாக வைத்து 'பத்மாவதி' என்ற படத்தை தயாரித்து உள்ளார். இப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தில் ராஜபுத்திர சமூ கத்தினரை இழிவுபடுத்தும் வகை யிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி அந்தச் சமூகத்தினர் போராட் டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பத்மாவதி படம் வெளியாவதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என தீபிகா தெரி வித்திருந்தார். சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் வெட்டியது போல் நாங்கள் தீபிகாவின் மூக்கை வெட்டுவோம் என ராஜபுத்திர கர்னி சேனா அமைப்பின் ராஜஸ் தான் தலைவர் மிரட்டல் விடுத் துள்ளார். படம் வெளியாகும் அன்று நாடு தழுவிய அளவில் பந்த் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.