ரஜினியிடமிருந்து பெரும் தொகையை எதிர்பார்க்கும் தமிழ் ஆர்வலர்கள்

ரஜினியிடமிருந்து பெரும் தொகையை எதிர்பார்க்கும் தமிழ் ஆர்வலர்கள்

1 mins read
98c5c680-c160-4cf1-83bc-128430928dc3
-

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார். அவருக்கு முன்பே நடிகர் விஷால் 10 லட்ச ரூபாயும் நடிகர் கருணாஸ் 1 லட்ச ரூபாயும் வழங்கினார்கள். நடிகர் ஜி.வி.பிரகாஷ் எவ்வளவு தொகை எனத் தெரிவிக்காமல் நன்கொடை வழங்கினார். சூர்யா நன்கொடை தருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை வழங்கினாரா என்பது குறித்துத் தகவல் எதுவும் இதுவரை இல்லை. தங்கள் படங்களிலும் வசனங் களிலும் தமிழுக்காகவும் தமிழர் களுக்காகவும் வாழ்கிறோம் என முழக்கமிடும் சில நடிகர்கள் இதற்காக நன்கொடை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் இருக்கை அமையவேண்டும் எனப் பாடுபடும் தமிழ் ஆர்வலர்கள் இது குறித்துப் பல நடிகர்களுக்குத் தகவல்களை அளித்து வருகின்றனர்.

"என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா... என் உடல் பொருள் ஆவியைத் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா," என்று 'படையப்பா' படத்தில் ரஜினிகாந்த் பாடியுள்ளார். தமிழுக்காக உடல், பொருள், ஆவியைக் கொடுப்பேன் என்று பாடி ரசிகர்களைச் சேர்த்த ரஜினிகாந்த், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக எவ்வளவு நன்கொடை அளிப்பார் என்ற சர்ச்சை சமூக வலைத் தளங்களில் காரசாரமாகப் பேசப்பட்டு வருகிறது. மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் பலரும் இதற்காக நன்கொடைகள் தரும்போது, 'தமிழ், தமிழர்கள்' என முழக்கமிடும் மற்ற நடிகர்களும் இதற்காக ஏதாவது செய்வார்களா எனத் தமிழ் ஆர்வலர் கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.