விஜய் ஆண்டனி 'அண்ணாதுரை', 'காளி' படங்களில் நடித்துள்ளார். இதில் 'அண்ணாதுரை' படத்தை சீனிவாசனும் 'காளி' படத்தை கிருத்திகா உதயநிதியும் இயக்கியுள்ளார்கள். 'அண்ணாதுரை' நவம்பர் 30ஆம் தேதி வெளியாவதை அடுத்து 'காளி' படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 'அண்ணாதுரை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலினும் கிருத்திகா உதய நிதியும் கலந்து கொண்டனர். அப்போது உதயநிதி பேசும்போது, "நான் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்பு டிரைலரை வெளியிட்டால் அதன்மூலம் கதை கசிந்து விடுமோ என்று பயப்படுவேன். ஆனால் விஜய் ஆண்டனியோ படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் பத்து நிமிட காட்சிகளைத் திரையிட்டுக் காட்டுகிறார்.
இது அவரது தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. இந்தப் படத்தில் 'ஜிஎஸ்டி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பாடல் ஒன்றை எடுத்திருக்கிறார்கள். அதனால் நடிகர் விஷால் வீட்டில் நடந்ததுபோல உங்கள் வீட்டிற்கும் வருமான வரிச் சோதனை வர வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருங்கள் விஜய் ஆண்டனி," என்று கிண்டலாக எச்சரித்தார் உதயநிதி.

