உமாபதி: என் அப்பா அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பார்

உமாபதி: என் அப்பா அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பார்

1 mins read
0ecfe6dc-49b5-4669-b15a-b2fc7ec7915a
-

குணச்சித்திர நடிகர்கள் வரிசையில் தம்பி ராமையாவுக்குதான் தற்போது மவுசு அதிகம். இருப்பினும் தேடி வந்த பல வாய்ப்புகளை புறந்தள்ளிவிட்டு, மீண்டும் படம் இயக்கி வருகிறார். எல்லாம் மகனுக்கு தந்தை ஆற்றும் கடமைதான் காரணம். தன் மகன் உமாபதியை முன்னணி நாயகனாக உருவாக்க வேண்டும் என்பது தம்பி ராமையாவின் விருப்பமாக உள்ளது. அதனால் நடிப்புக்கு விடுமுறை அளித்துவிட்டு, கதை, திரைக் கதை, வசனம், பாடல்கள் எழுதி, தாமே இசையமைத்து இயக்கும் 'உலகம் விலைக்கு வருது' படத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்தில் உமாபதி தான் நாயகன் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தந்தை தனக்காகப் பல பொறுப்புகளை ஏற்றிருப்பதில் மகனுக்கு அப்படி யொரு மகிழ்ச்சி. "அப்பா எப்படிப்பட்ட திறமை சாலி என்பது ஊருக்கே தெரியும். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. என்னுடைய முதல் படமே அப்பா இயக்கத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பியதும் உண்டு. ஆனால் அதற்கு இப்போதுதான் காலம் கனிந்துள்ளது. "இப்போதும் அப்பாவுக்குத் தொடர்ச்சியாகப் பட வாய்ப்புகள் இருந்தாலும் எனக்காக நான்கு மாதம் நடிப்புக்கு ஓய்வு கொடுத் துள்ளார். அப்பா இயக்கத்தில் நடிப்பது எனக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது.