'இருட்டு அறையில் முரட்டு குத்து'

'இருட்டு அறையில் முரட்டு குத்து'

1 mins read
28051768-763d-414e-935a-d7c9aec2be9a
-

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. இது பேய்ப் படமாம். அதிலும் வழக்கமான பேய்க் கதையாக இல்லாமல் ரொம்ப வித்தியாசமாக இருக்குமாம். கவுதமை வைத்து இயக்கிய 'ஹரஹர மஹாதேவகி' மூலம் ரசிகர்களைப் பேச வைத்த சன்தோஷ் பி.ஜெயக்குமார்தான் இப்புதிய படத்தையும் இயக்குகிறார். "முதல் படத்தை தொடர்ந்து இந்தப் படத்துக்கும் பாடல்கள் எழுதுகிறேன். ஆனால், எந்தக் காலத்திலும் நாயகர்களுக்குப் போட்டியாக நான் நடிக்க மாட்டேன். "படம் இயக்க வாய்ப்பு கிடைக்காமல் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தேன். நான் கடைசியாக கதை சொன்ன நாயகன் கவுதம் கார்த்திக். அதில் நடிக்க துணிச்சலாக ஒப்புக் கொண்டார். படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படமும் காப்பாற்றும்," என்கிறார் சன்தோஷ் பி.ஜெயக்குமார்.