விஜய் சேதுபதியை பின்பற்றும் விஜய் ஆண்டனி

விஜய் சேதுபதியை பின்பற்றும் விஜய் ஆண்டனி

1 mins read
b774a2cc-58ae-4e0d-ba95-f2e621cfd765
-

விஜய் சேதுபதியைத் தொடர்ந்து சரியான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். தனக்கு காதல், நகைச்சுவை சரியாக வராது என்பதைப் புரிந்துகொண்டு அவைகளைத் தவிர்க்கும் விதமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்று விஜய் ஆண்டனியை ஒரு நிலையான இடத்தில் வைத்திருக்கிறது.

இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள 'அண்ணாதுரை' படம் நவம்பர் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. புதுமுக இயக்குநர் சீனிவாசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி ஒரு வேடத்தில் காதல் தோல்வியால் குடிகாரனாகத் திரியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த வேடத்திற்கு உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் அதிகமாக உள்ளன. அதனால் 'பிச்சைக்காரன்' படத்திற்கு பிறகு இந்தப் படத்தின் காதல் காட்சிகள் தனக்கு ரசிகர்கள் மத்தியில் இன்னொரு அழுத்தமான இடத்தைப் பிடித்துத்தரும் என்று எதிர்பார்க்கிறார் விஜய் ஆண்டனி.