திரிஷா 'யுனிசெஃப்' நல்லெண்ண தூதரானார்

திரிஷா 'யுனிசெஃப்' நல்லெண்ண தூதரானார்

1 mins read
940307f3-b451-441e-8c11-2c1247dd9e64
-

குழந்தைகள் உரிமைக்கான 'யுனிசெஃப்' அமைப்பின் நல்லெண்ண தூதராக நடிகை திரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கிறார் திரிஷா. கடந்த 15 ஆண்டுகளாக திரைத்துறையில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இப்போது தமிழ், மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித் துள்ளார். 'மோகினி', 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', '96', ஆகிய படங்களில் நடித்துக் கொண்டும் இருக்கிறார். தமிழகம், கேரள மாநிலங் களுக்கான குழந்தைகள் உரிமைக் கான 'யுனிசெஃப்' தூதராக திரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழகம், கேரள யுனிசெஃப்பின் தலை வரான ஜாப் ஜச்சாரியா அறிவித்துள்ளார்.

குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழி லாளர்கள், குழந்தை பாலியல் வன்முறை போன்றவற்றுக்கு எதிராக அவர் குரல் கொடுக்க உள்ளார். இதுகுறித்து திரிஷா கூறுகை யில், "இதை மிகப்பெரிய கௌர வமாக உணர்கிறேன். குழந்தை களின் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தமிழகம், கேரளாவில் நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். ஊட்டச் சத்து மிகுந்த மாநிலமாக உருவாக்குவதே என் இலக்கு," என்றார். முதன்முறையாக தென்னிந்திய நடிகை ஒருவர் 'யுனிசெஃப்'பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப் படுவது இதுவே முதல்முறை.