'நரகாசூரன் யார் என்பது பரம ரகசியம்'

'நரகாசூரன் யார் என்பது பரம ரகசியம்'

1 mins read
5319fcb5-513a-483b-856d-21b93bd62944
-

'துருவங்கள் பதினாறு' படத்தை அடுத்து 'நரகாசூரன்' என்ற தலைப்பில் படம் இயக்கி வருகி றார் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். முக்கிய காட்சிகளை ஊட்டியில் படமாக்கி வருகின் றனர். அரவிந்த்சாமி, சந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமார், ஸ்ரேயா எனப் பலர் இப்படத்தில் நடிக்கின்ற னர். ஊட்டியின் அடர்ந்த காட்டுப் பகுதியில் படப் பிடிப்பை நடத்தி னார்களாம். என்ன மாதிரி யான கதை? யார் இந்த நரகாசூரன்? "எல்லாவற்றையும் இப்போதே சொல்லி விட முடியாது. நரகா சூரன் யார் என்பது பரம ரகசியம். " த லை ப் பை ப் பார்த்துவிட்டு, தீபா வளி கொண்டாடு றோமே, அந்த நரகா சுரனா? என்று பலரும் விசாரிக்கி றார்கள். அதெல் லாம் இல்லை. "இந்த நரகா சூரன் கதாபாத்திரம் ரசிகர்களால் நிச்சயம் பேசப்படும். மொத்த படப்பிடிப்பையும் 41 நாட் களில் முடிக்கவேண்டும் எனத் திட்டம் போட்டு அதற்காக ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறோம்," இயக்குநர் கார்த்திக் நரேன்.