டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் புதிய படம் 'யாழ்'. ஆஸ்திரேலியா வாழ் தமிழரான எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் இது. இதில் முழுக்க முழுக்க ஈழத் தமிழ் நடையிலான வசனங்களே இடம் பெற்றுள்ளதாகத் தகவல். கதாநாயகி களாக நீலிமா, லீமா, மிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் ரக் ஷனா வுடன், மேலும் பல ஈழத்து கலை ஞர்களும் இதில் தங்களது பங்க ளிப்பை வழங்கி உள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் எனப் பல பொறுப்புகளைச் சுமந்துள்ளார் எம்.எஸ்.ஆனந்த்.
இந்தத் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்கிறார் இவர். எப்படி? என்ற கேள்விக்கு அவர் அளிக்கும் விளக்கத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தின் கதை, ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாதாம். "அனைத்து கதாபாத்திரங்களுமே ஈழத் தமிழர்கள்தான். படத்தின் பாடல்களும் கூட ஈழத் தமிழில்தான் இருக்கும். பாடலாசிரியர்களும் இலங்கை தமிழர்களே. வசனம் முழு வதும் இலங்கை தமிழிலே இருக்கும்," என்கிறார் எம்.எஸ்.ஆனந்த்.
'யாழ்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் வினோத், நீலிமா.

