விமர்சித்தவர்களுக்கு டாப்சி பதிலடி

விமர்சித்தவர்களுக்கு டாப்சி பதிலடி

1 mins read
28a96f6f-2ccf-4592-a3c4-738f883a751c
-

பெண்கள் கவர்ச்சி உடைகள் அணிவது குறித்து விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார் டாப்சி. பெண்களை எந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும் என்பது சிலருக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில் தனது கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டார் டாப்சி. அவற்றைக் கண்ட ரசிகர்கள் பலவிதமாக விமர்சனம் செய்துள்ளனர். "இப்படி எல்லாம் மோசமான உடை அணிவதால்தான் பெண்களை ஆண்கள் தவறாகப் பார்க்கிறார்கள். பணத்துக்காகத்தானே இப்படி கவர்ச்சி போஸ் கொடுக்கிறீர்கள்," என்றும் சிலர் விமர்சித்துள்ளனராம். மேலும் சில எக்குத்தப்பான கேள்விகளையும் சில ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். அவற்றைக் கண்டு அம்மணி ஏகத்துக்கும் கடுப்பாகிவிட்டாராம். "நீங்கள் ஏன் பெண்களைத் தவறான கோணத்தில் பார்க்கிறீர்கள்? முதலில் உங்கள் பார்வையை மாற்றுங்கள்," என்று பதிலடி கொடுத்துள்ளார் டாப்சி. இவருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்துள்ளனர்.