'யு' சான்றிதழுடன் வெளியாகிறது கௌதம் கார்த்திக்கின் 'இந்திரஜித்'

'யு' சான்றிதழுடன் வெளியாகிறது கௌதம் கார்த்திக்கின் 'இந்திரஜித்'

1 mins read
f68d9fa5-719a-46fd-9dfc-c59d05efc686
-

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'இந்திரஜித்'. அவரது ஜோடியாக அஷ்ரிதா ஷெட்டி நடிக்க கலா பிரபு இயக்குகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் சோனாரிகா படோரியா, ராஜுவர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அண்மையில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். இது அடிதடிகள் நிறைந்த திகில் படமாக இருக்குமாம். "என் இளைய மகனும் சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைத்தபோது, அது தேவையா என யோசித்தேன். அண்ணனுக்குப் பட வாய்ப்பு கொடுங்கள் என்று என் மகள் சொன்னார். முதலில் 'சக்கரகட்டி' என்ற அருமையான படத்தை கலாபிரபு கொடுத்தார். நான் பல ஆண்டுகளாக கார்த்திக்கிடம் கால்‌ஷீட் கேட்டு வந்தேன். அவர் தரவில்லை. அவரை வைத்து படம் தயாரித்தது இல்லை. 'இந்திரஜித்' படத்தில் அவருடைய மகன் கௌதம் நாயகனாக நடிப்பதில் மகிழ்ச்சி," என்கிறார் தாணு.

கௌதம் கார்த்திக் , அஷ்ரிதா ஷெட்டி