ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று சொல்வதைத் தன்னால் ஏற்க முடியாது என்கிறார் நடிகை ராய் லட்சுமி. அவர்களில் ஒரு சிலர் மட்டுமே கெட்டவர்கள் என்று அவர் கூறியுள்ளார். அண்மைய பேட்டி ஒன்றில் தனது காதல், திரையுலக அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பல தகவல்களைப் பகிர்ந்துகொண் டார் ராய் லட்சுமி. இதுவரை ஐந்து முறை தன் மனதில் காதல் மலர்ந்ததாகவும், அவை அனைத்துமே தோல்வியில் முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'அனுசரித்து' போனால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் எனில் தனக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகளே தேவையில்லை என்றும் திட்ட வட்டமாகக் கூறியுள்ளார் ராய் லட்சுமி. "அண்மைக் காலமாக திரையுலகில் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. படுக்கையைப் பகிர்ந்து கொண்டால்தான் பட வாய்ப்புகளைப் பெற முடியும் என்று சில நடிகைகள் துணிச்சலுடன் சொல்லி வருகி றார்கள். அதுபோன்ற அனுபவம் எனக்கு நேரடியாக ஏற்படவில்லை.
லட்சுமியின் காதலர்கள்
1 mins read
-

