நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமாரின் திடீர் உயிரிழப்பு திரையுலகினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ள நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாகப் கூறப் படும் அன்புச்செழியனுக்கு எதி ராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அனை வரும் கடன் கொடுத்த அன்புச் செழியனை மிகைப்படுத்தி சித்தி ரிப்பதாக நடிகரும் இசையமைப் பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். "அசோக்குமார் அவர்கள் தனது மனைவி, பெற்றோர், குழந்தை களைத் தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்யும் முடிவைத் தவிர்த்திருக்க வேண்டும். "நான் கடந்த 6 வருடக் கால மாக தயாரிப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புச்செழிய னிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன்.
வாங்கிய பணத்தை முறையாகத் திரும்பச் செலுத்தியும் வருகி றேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில் நடந்து கொள்கிறார். அனைவரும் அவரைச் சற்று மிகைப்படுத்தி சித்திரிப்பதாகத் தோன்றுகிறது. "திரைப்படத்துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் கள், கடன் வாங்கி படம் எடுத்துத் தான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள்," என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக பார்த்திபன் கூறியுள்ளார். "நண்பர்கள் கூட கஷ்டப்படும் வேளையில் நமக்கு உதவி செய்வதில்லை. இந்த வட்டிக்கு விடுபவர்கள்தான் உதவுவார்கள். கொடியவர்களிடம்தான் பணம் வாங்குகிறோம் என்ற நிலையைப் புரிந்துகொண்டு அதை வாங் காமல் இருக்க என்ன செய்வது? ஒருவேளை வாங்கிவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்.
'பிச்சைக்காரன்' படத்தில் விஜய் ஆண்டனி, சட்னா டைட்டஸ்.

