நயன்தாராவுடன் ஒப்பிடும் அளவுக்கு தாம் இன்னும் வளரவில்லை என தன்னடக்கத்துடன் பேசுகிறார் ரகுல் பிரீத் சிங். அதேசமயம் நயனைப் போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்கவே தானும் விரும்புவதாகச் சொல்கிறார். "நான் இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை. என் திறமையை இன்னும் வளர்த்துக் கொள்ள முடிந்த அளவு முயற்சி செய்வேன். மற்றபடி நயன்தாரா இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. "நயன்தாரா மூத்த நடிகை. அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து, தாம் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்து வருகிறார். நான் இன்னும் அவரைப் போன்ற வேடங்களில் நடிக்கவில்லை," எனச் சுட்டிக்காட்டுகிறார் ரகுல். 'ஸ்பைடர்' வெளியான பிறகு ரகுல் பிரீத் சிங் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்தார்.
தன்னடக்கத்துடன் பேசும் ரகுல் பிரீத்
1 mins read
-

