ஷாதிகா: நாயகியாகவும் நடிப்பேன்

ஷாதிகா: நாயகியாகவும் நடிப்பேன்

1 mins read
bb47b6b5-ba20-4a3d-ab58-44af4c45e1aa
-

"கதாநாயகியாகவும் நடிப்பேன். ஒரு பக்கம் அதற்குரிய முயற்சியில் தான் இருக்கிறேன். நான் குழந் தையாக நடித்தது முதல் இன்று வரை என்னைத் தேடி வந்து அமைந்த வாய்ப்புகள் தான் என்னை வளர்த்துள்ளன, செதுக்கியுள்ளன. "அதனால் என் தேடலின் போதே எனக்கு ஏற்றபடி கதாநாயகி வாய்ப்பும் வரும் என்று நம்புகிறேன். எனக்கான காலம் வரும் வரை காத்தி ருப்பேன்," என்கிறார் ஷாதிகா. படிப்பையும் நடிப்பையும் எப்படி உங்களால் தொடர முடிகிறது?

"நான் படிப்பிலும் படு சுட்டி. பள்ளி நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்தாலும், அது படிப்பைப் பாதிக்காதபடி நன்றாகப் படிப்பேன். "அதனால்தான் நல்ல மதிப் பெண்கள் பெற்று பட்டப் படிப்பையும் முடிக்க முடிந்தது." மறுபடியும் சுசீந்திரன் இயக்கத் தில் 'ஏஞ்சலினா' படத்தில் நடிப்பது குறித்து? "அவரது படத்தில் நடிக்கும் போது என்ன கதை, என்ன கதாபாத்திரம் என்று கேட்கமாட்டேன். அப்படித்தான் இந்தப் படத்திலும் ஒப்பந்தமானேன். "என்னுடைய சினிமா வாழ்க்கையை 'ஏஞ்சலினா' படம் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்லும் என்பது உறுதி," என நம்பிக்கையுடன் சொல்கிறார் ஷாதிகா.