ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள புதிய படம் 'டிக் டிக் டிக்'. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் விண்வெளிப்படமாக இது உருவாகி இருக்கிறது. படத்தின் முன்னோட்ட காட்சிகளை அண்மையில் வெளியிட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு முன்னோட்டம் இருப்பதாக பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவும் வாழ்த்துவோர் பட்டியலில் இணைந்துள்ளார். "என் தம்பி ஆங்கிலப் படத்தில் நடித்துவிட்டார். தமிழ்ச் சினிமாவின் தரத்தின் அளவீட்டை உயர்த்தியதற்காக நன்றி," என்று தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோகன்ராஜா. தனது அண்ணனின் பாராட்டு உற்சாகம் அளிப்பதுடன், பெருமையாகவும் உணர்வதாக தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி. 'டிக் டிக் டிக்' இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனும் மோகன் ராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவியை வாழ்த்திய சகோதரர்
1 mins read
-

