விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தெலுங்கு பதிப்புக்கு 'கேங்' என்று தலைப்பு வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன், 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் இது. சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரும் 30ஆம் தேதி இப்படத்தின் முன்னோட்டம், இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. நடிகர் கார்த்திக் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தெலுங்கு பதிப்பின் தலைப்பு அறிவிப்பு
1 mins read
-

