ராய் லட்சுமி: வசூல்தான் மிக முக்கியம்

ராய் லட்சுமி: வசூல்தான் மிக முக்கியம்

1 mins read
609903ed-8c58-4dd1-8150-9cfa3fea0e5a
-

படம் குறித்த விமர்சனங்கள் தன்னைப் பாதிப்பதில்லை என்கிறார் நடிகை ராய் லட்சுமி. படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்தால் அது போதுமாம். லட்சுமி நடித்துள்ள 'ஜூலி 2' தற்போது வெளியாகியுள்ளது. தொடக்கத்திலேயே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது இப்படம். இந்நிலையில், நேற்று முன்தினம் 'ஜூலி 2' சிறப்புக்காட்சிக்கு வருகை தந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பல்வேறு தரப்பினரும் இப்படம் குறித்து விமர்சித்து வருவதாகத் தெரிவித்தார். "இதிலிருந்தே இந்தப் படத்தைப் பலரும் பார்க்கிறார்கள் என்பது உறுதியாகிறது. என்னைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் பெரிதல்ல, ஒரு திரைப்படத்தின் வசூல்தான் மிக முக்கியம். "மிக விரைவில் இந்திப் படம் ஒன்றில் நடிக்க உள்ளேன். கடந்த இரு ஆண்டுகளாக 'ஜூலி 2' பட வேலைகள் காரணமாக பிற மொழிப் படங்களில் நடிக்க முடியவில்லை. இனி அவற்றிலும் கவனம் செலுத்த உள்ளேன்," என்கிறார் ராய் லட்சுமி.